நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்துள்ள பட்டமங்கலம், இலுப்பூர்சத்திரம், தேவூர், கூத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் நெல் பயிர்கள் நன்கு வளர்ந்து பச்சை பசேலென பார்ப்பவர்களின் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.
இந்த விளை நிலங்களில் வளைகளை அமைத்து வாழும் எலிகள் (Rats) நெற்பயிரை அழித்து விவசாயிகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. எலிகளை பிடிக்க விவசாயிகள் எளிமையான தொழில்நுட்பத்தை (Techniques) பயன்படுத்தி வருகின்றனர்.
ஒரு பானையில் (Pot) வைக்கோல்களை (Starw) அடுக்கி, நெருப்பு வைத்து, அதில் இருந்து வரும் வெளிவரும் புகையினை நிலத்தில் அமைத்துள்ள எலி வளைக்குள் செலுத்துகின்றனர். எலி வளைக்குள் செல்லும் புகையால் அங்கிருக்கும் எலி மூச்சு திணறி இறந்து விடும் அல்லது புகையில் இருந்து தப்பி செல்வதற்காக பாதையில் மண்ணை விலகிக் கொண்டு வெளியேறும் போது அந்த இடத்தை வெட்டி எலியை பிடிக்கின்றனர்.
இதற்கு குறைந்த செலவு ஆவதால் தற்போது நாகையில் பல இடங்களில் இந்த முறையை பயன்படுத்தி தான் எலிகளை வேட்டையாடி வருகின்றனர். நெற்பயிர்களை வேட்டையாடும் எலிகளுக்கு இந்த எளிய முறை, குறைந்த செலவில் நல்ல பலனளிக்கிறது. இனி, விவசாயிகள் மகசூலை அதிகரித்து இலாபம் ஈட்டலாம்.