எண்ணெய் வித்துப் பயிர்களில் தரமான விதை உற்பத்தி

எண்ணெய் வித்துப் பயிர்களில் தரமான விதை உற்பத்தி

நவீன தொழில்நுட்பங்கள்

தரமான எண்ணெய்வித்து விதைகள், புதிய இரகங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் மட்டு மே உற்பத்தியை பெருக்குவதற்கான எளிய வழியாகும்.

  • நிலக்கடலையில் புதிய ரகங்களான கோ 6, கோ 7 ஆகியன வறட்சியை தாங்கி வளர கூடியன.
  • எள் பயிரில் டி.எம்.வி 7 குறுகிய கால பயிராகும். மற்றும் எண்ணெய்ச் சத்து அதிகம் உள்ள ரகமாகும்.
  • தரமான விதைகளை நாமே உற்பத்தி செய்வதினால் நல்ல விதை கள் கிடைப்பதுடன் அதிக வருமானமும் கிடைக்கும்
  • நிலக்கடலை சாகுபடி செலவில் 40% விதைக்கு செலவாகிறது. தரமான விதைகளை பயன்படுத்துவது மிகவும் முக்கியமாகும்.
  • விதை உற்பத்திக்கு நிலத் தேர்வு செய்யும்போது முந்தைய பயிர் அதே பயிராக இருக்கக் கூடாது.
  • பருவத்தில் பயிர் செய்வது மிகவும் முக்கியமாகும். அதிக மழையோ, அதிக வெயிலோ அறுவடை தருணத்தில் வராமல் இருக்க பருவத்தில் பயிர் செய்ய வேண்டும்
  • இனக் கலப்பைத் தவிர்க்க ரகம் மற்றும் பயிர்க் கலப்புகள் இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.
  • செடி பருவம், பூக்கும் பருவம் மற்றும் காய்கள் பிடிக்கும் தருணத்தில் கலப்புகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது அவசியமாகும்.
  • பயிர்களை பூப்பூக்கும் முன்புவிதை சான்றளிப்பு துறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.பதிவு செய்வதற்கு விதை சான்றளிப்பு அட்டை, விதை வாங்கிய ரசீது அவசியமாகும். அந்தந்த வட்டார விரிவாக்க மையத்தில் பதிவுசெய்துக் கொள்ளலாம் என்றார்.
  • ஒரு ஏக்கருக்கு நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் 160 கிலோ தேவைப்படும். 80 கிலோ அடியுரமாகவும், மீதமுள்ள 80 கிலோ பூக்கும் தருவாயில் மண் அணைத்து இட வேண்டும். இப்படி செய்வதால் காய்கள் திரட்சியுடன் கிடைக்கும். பயிர்களின் எண்ணிக்கையை பராமரிப்பதின் மூலம் மகசூலை அதிகரிக்கலாம்

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்