உயிர்சக்தி மாட்டுக் கொம்பு சிலிக்கா தயாரிக்கும் முறை

நன்றாக பொடி செய்த குவார்ட்ஸ் துகள்களைக் கொண்டு தயார் செய்யப்படுகிறது. இந்தத் துகள்கள் நல்ல தரம், வடிவம் மற்றும் சுத்தமாக இருக்க வேண்டும். உயிர்சக்தி 500 ஐ தயாரிப்பு முறை மாதிரியே இதையும் புதைக்க வேண்டும். ஆனால் இந்த முறையை வெயில் காலத்தில் செய்ய வேண்டும். (ஏப்ரல் / மே மாதத்தில் புதைத்து, செப்டம்பரில் வெளியே எடுக்க வேண்டும்). இந்த சமயத்தில் நிலம் நல்ல காற்றோட்டமாகவும், விண்வெளி ஒளிச் சக்தி அதிகச் செயலாக்கத்தில் இருக்கும்

தேவையான பொருட்கள்

  • மாட்டுக் கொம்புகள்
  • சிலிக்கா குவார்ட்ஸ் துகள்கள், 200 – 300 கிராம் அளவு குவார்ட்ஸ் துகள்கள் / கொம்புகள்

தயாரிக்கும் முறை

சிலிக்கா குவார்ட்ஸை உடைத்துத் தூளாக்க வேண்டும். இரண்டு கண்ணாடித் தட்டுக்களின் இடையே வைத்து அரைத்து நன்றாக பொடி செய்ய வேண்டும் முதல் கண்ணாடித் தட்டு – 12” சதுரமாக, 9 மி. மீட்டர் தடிமன்னான மரப்பலகையால் ஆனது. இரண்டாவது கண்ணாடித் தட்டு – 4” சதுர கண்ணாடித்தட்டு கைப்பிடியுடன் கூடிய மரப்பலகையின் மீது வைக்கப்படும்.

தயாரிக்கும் போது முகமூடிகள் அணிந்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் குவார்ட்ஸ் புகையை சுவாசித்து, சிலிக்காஸிஸ் வியாதி ஏற்படும். தண்ணீருடன் சேர்த்து திட்டமான புகையை உருவாக்க வேண்டும். கொம்புகளை சிலிக்கா பூச்சு கொண்டு நிரப்ப வேண்டும். கொம்புகளை குழிகளில் 1” அளவுக்கு அடிப்பகுதி கீழ்நோக்கி இருக்குமாறு புதைக்க வேண்டும். 50 சதவீத மட்கிய உரம் மற்றும் மண் சுற்றியும் இருக்க வேண்டும். மார்ச் / ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இதை வைத்திருக்க வேண்டும்.

அளிப்பு முறைகள்

BD 500 ஒன்று அல்லது இரண்டு அளிப்புகளுக்குப் பிறகு 501 ஐ அளிக்க வேண்டும். பனிப் பொழியும் வேளையில், அதாவது அதிகாலை 6 – 8 மணிக்கு சூரியன் உதிக்கும் வேளையில் தெளிக்க வேண்டும். 15 லிட்டர் வெது வெதுப்பான நீரில் 1 கிராம் சிலிக்காவை கரைக்க வேண்டும். சூரிய உதயத்திற்கு முன், சிலிக்காவை தண்ணீரில் கரைத்து வலதுப் பக்கம் மற்றும் இடதுப் பக்கம் மாற்றி மாற்றி சுழல் போன்று கலக்க வேண்டும். பயிர்கள் குறை அழுத்தம் உடைய தெளிப்பான் உதவியுடன் தெளிக்க வேண்டும். பயிரிடும் காலத்தில் 2 முறை தெளிக்க வேண்டும். அதாவது, பயிரின் ஆரம்ப நிலையிலும், அறுவடைக்கு சற்று முன்னரும் தெளிக்க வேண்டும்.

சேமித்தல்

திறந்த வெளியில் சூரிய வெளிச்சம் படுமாறு 3 வருடங்களுக்கு தளர்வாக மூடிய கண்ணாடிக் குடுவையில் சேமிக்க வேண்டும்.

பயன்கள்

ஒளி வளர்சிதை மாற்றம், ஒளிச்சேர்க்கை, பச்சையத்தை அதிகரிக்கிறது. நிறம், மணம், சுவை மற்றும் செடிகளுக்கிடையே வைத்திருக்கும் தரத்தை மேம்படுத்துகிறது

ஆதாரம் : தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், உதக மண்டலம்

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்