ஈ.எம் கரைசல் தயாரிக்கும் முறை

ஈ எம் 1 (EM 1) கரைசலை விவசாயிகளே தயார் செய்ய முடியும். தயார் செய்த கரைசலை மாதங்கள் வரை சேமித்து வைத்து கொள்ளலாம். தயாரித்த இரண்டு மாதத்திற்குள் உபயோகப்படுத்தும்பொழுது இதன் வீரியம் நன்றாக இருக்கும். நாட்கள் செல்ல செல்ல இதன் வீரியம் குறைய தொடங்கும்.


ஒரு ஏக்கருக்கு தயாரிக்கத் தேவைப்படும் பொருட்கள்

  • பப்பாளி-1 கிலோ,
  • பரங்கி-1 கிலோ,
  • வாழைப்பழம்-1 கிலோ,
  • நாட்டுச்சர்க்கரை-1 கிலோ,
  • முட்டை-1

செய்முறை

  • பழங்களைத் தோலோடு சேர்த்து சிறிதுசிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாய் குறுகலான மண் அல்லது பிளாஸ்டிக் கேனில் இவற்றைப் போடவும்.
  • முட்டையை உடைத்து, ஓடுகளையும் சேர்த்து அதில் போட்டுவிடவும்.
  • இந்தக் கலவை முழ்கும் வரை தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
  • பிறகு, காற்று உள்ளே போகாமல் இறுக்கி மூடிவிடவும்.
  • 15 நாட்கள் கழித்து திறந்து பார்க்கும்போது கலவையின் மீது வெண்மையான நிறம் தோன்றியிருந்தால் இ.எம். நுண்ணுயிரிகள் வேகமாக வளர்கின்றன என்று அர்த்தம். அப்படி இல்லாவிட்டால், ஒரு கைப்பிடி நாட்டுச் சர்க்கரையை போட்டு மூடிவைத்து விடவும்.
  • அடுத்த 15-ம் நாள், அதாவது 30-ம் நாள் இ.எம் தயார். 10 லிட்டர் நீருடன் 500 மில்லி இ.எம். கலந்து தெளிக்கலாம்.

    பயிர்களுக்கு கொடுக்கும் முறை – பயன்கள்

    இந்த கரைசலுடன் மேம்படுத்தப்பட்ட அமிர்த கரைசலை கலந்து கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்தால் நல்ல பயன் கிடைக்கும். இதனுடன் மீன் அமிலத்தை கலந்து கொடுப்பதால் பூக்கள் உதிர்வது முற்றிலும் தடுக்கப்படுகிறது. 15 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் வரை E. M கரைசல் கலந்து பயிர்களுக்கு கொடுக்கலாம். ஈ.எம் 1 கரைசலை வேர்களின் மூலம் கொடுப்பதால் இதன் முழு பயன்களும் பயிர்களை சென்றடையும். இதனால் மண்ணில் நுண்ணுயிர்களின் பெருக்கம் அதிகமிருக்கும். இந்த கரைசலில் அணைத்து வகையான பாக்டீரியாக்களும் அடங்கியுள்ளது. இந்த கரைசலை பயிருக்கு கொடுப்பதால், பயிர்கள் நன்றாக வறட்சியை தாங்கி வளரும். இதனை தொடர்ந்து கொடுப்பதால் நிலத்தில் மண்புழுக்களின் எண்ணிக்கை அதிகமாகும். இயற்கை கரைசல்கள் அனைத்தையும் வேர்கள் மூலமாக கொடுப்பது நல்ல பலன்களை கொடுக்கும். இலைகளின் வாயிலாகவும் கொடுக்கலாம். அனால் வேர்களின் மூலம் பயிர்களுக்கு கொடுப்பதே சிறந்தது.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
9
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்