வீடியோக்கள்

இரண்டு தலைமுறையாய் வண்டிமாடு வளர்ப்பாளர்

Vandi Maadu | Tamil Vivasayam | TV | FM

அனைவருக்கும் வணக்கம். இன்றைக்கு (07.07.2021) வண்டிமாடு வளர்ப்பு குறித்தும், மாடுகள் குறித்தும் தெரிந்து கொள்ள அவணியாபுரம் சென்றோம். நாங்கள் அந்த வண்டி மாடை மட்டும் எடுக்கச் சென்ற நோக்கம் என்னவென்றால் அந்த வண்டியை இழுக்கும் மாடுகள்தான்.

பூரணி என்ற மாடுகள்தான் அவை. திருவண்ணா மலையைச் சேர்ந்த இந்த வகை மாடுகள் நாட்டின மாடுகள்தான். பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். எனக்கு அதன் கொம்புகள்தான் அவ்வளவு இஷ்டம். இந்த மாட்டினை எடுக்க வேண்டும் என்ற ஆசையே இந்த வண்டிமாட்டினை நேர்காணுலுக்கு எங்களை கொண்டு சென்றது.

நல்ல வெயில் காலை 11 மணி அளவில் சென்றோம். குட்டி குட்டி சந்து வழியாக வண்டிக்காரர் உயர்திரு.கணபதி அய்யா அவர்கள் எங்களை கூட்டிச் சென்றார். அவருக்கு பின்னால் ஒரு குட்டி படையே வந்து எங்களை அழைத்துச் சென்றது. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. மகிழ்ச்சியாகவும் இருந்தது.

அதில் ஒரு சிறுவன் மன்னிக்கவும் பெயர் ஞாபகம் இல்லை. மகள் பிள்ளை என்றார். அப்படி ஒரு பேச்சு, மாடுகள் மீது அந்த சிறுவனுக்கு இருந்த ஆர்வம் அவன் மீது எனக்கு தனி அன்பையும். மரியாதையையும் ஏற்படுத்தியது. அடுத்ததலைமுறையினர் இதில் இருக்க வேண்டும் என்ற ஆர்வம்தான்.

பால்மாடு கொட்டகை இருந்தது. அங்கே சென்று வீடியோ எடுக்க ஆரம்பித்தோம். சரியாக அமையவில்லை என்பதால், வேறு ஒரு இடத்திற்கு மாட்டினை மாற்றினோம். அங்கேயும் எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை. அதன் பிறகு அவணியாபுரம் பார்க்குச் சென்றோம். அந்த இடம் எங்களுக்கு ஏற்றதுபோல் இருந்தது. எங்கள் கூட பசங்களும் மாட்டுவண்டில சந்தோசமா வந்தாங்க.

ஒரு வழியா இடம் கிடைத்தது என்று பேட்டியை துவங்கினால், மைக் பிரச்சனை, சவுண்டே வரல. பத்து நிமிசம் குழப்பத்தில், மாட்டு வண்டியில் சின்ன பசங்க வந்த வீடியோ எல்லாம் டெலிட் ஆயிருச்சு. அப்புறம் என்ன புது பேட்டரி அப்டி இப்டினு சவுண்ட் எடுத்துவிட்டது. அப்பாடி என்று பேட்டியை ஆரம்பித்தோம்.

ஐயா அவர்கள் தனது வண்டிமாடு வளர்ப்பு குறித்து பேசினார். அவர் பேசிய பொழுது இடையில்தான் தெரியும், இந்த பூரணி மாடு கலப்பு என்று. ஒரிஜினல் என்றால் இன்னும் கொம்பு ஒரு சேர நேராக இருக்கும். இது கொஞ்சம் பிரிந்து இருக்கு என்றார். ஆனால் என்னால் அதை நம்ப முடியவில்லை. ஏனெனில் இந்த மாடுகள் குறித்து புகைப்படம் பார்த்து இருக்கின்றேன். அவர் சொன்னதுபோல் கொம்பு மட்டும் சற்று வேறுபாடாக இருந்தது.

இருப்பினும், அந்த மாடு குிறத்து பல்வேறு கேள்விக்கு நிதானமாக பதில் அளித்தார். பல குழப்பம் ஏற்பட்டதால், இந்த பேட்டி எனக்கு திருப்தி அளிக்கவில்லை. ஆயினும் ஐயாவும், அவரது பேரன்களும் காட்டிய ஆர்வம் என்னை உற்சாகப்படுத்தியது. இறுதியாக ஐயா டீ வாங்க சொல்லி பசங்கள அனுப்பி வைத்தார். அதற்குள் நாங்கள் எங்களுக்குத் தேவையான புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம். சுடச்சுட அன்பு டீ யை சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து கிளம்பினோம்.

அந்த இரு மாடுகளில் ஒரு மாடு ரொட்ப சாது. அப்படி என்கிட்ட ஒட்டிக்குச்சு. வண்டி மேல ஏறி உட்கார்ந்து பார்த்தேன். அவ்வளவு சுகம். ஆடி காரில் கூட இந்த சுகம் நிச்சயமா கிடைக்காது. நம் பாரம்பரியம் அவ்வளவு இனிப்பாக இருந்தது. அந்த புகைப்படத்தை கேமரா தம்பி ராஜ் அழகா படம்பிடிச்சாங்க. அதை என் முகநூலில் பதிவு செய்தேன் (https://www.facebook.com/vidhyasan/). அடுத்த வீடியோவில் இந்த பூரணி மாடுகள் குறித்து இன்னும் கூடுதல் தகவல்களுடன் பதிவு செய்கின்றேன்.

நாளைக்கு சாத்தூர் வரை கன்னி நாய் குறித்த பயணம். அந்த பயணம் குறித்து அனுபவங்களை நாளை பகிர்கின்றேன். காத்திருங்கள்.

நன்றிகள் !!

_________________________________________________________
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh – 95 66 53 1237. (Whatsapp)
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

? App Link: https://play.google.com/store/apps/de…

? Facebook :https://www.facebook.com/maduraivideo

?web site : https://hellomaduraitv.com/

?web site : https://hellomadurai.in/

?web site : https://tamilvivasayam.com/

? Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

பகிருங்கள்

தமிழ் விவசாயம்

உழவின்றி உலகில்லை என்று உவகை கொள்வோம். அத்தொழிலையே நாம் அனைவரும் செய்வோம் "தமிழ் விவசாயம்" Email: tamilvivasayam1947@gmail.com
Back to top button
error: Content is protected !!