கட்டுரைகள்சாகுபடி

இயற்கை முறையில் விதை கேரட் சாகுபடி – 100 நாட்கள்

carrot plant

மலைப் பகுதிகளில் விதை கேரட் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கான அனைத்து ஆலோசனைகளும் 100 நாட்கள் அடிப்படையில் குறிப்பிட்டுள்ளேன். இந்த முறையில் விதை கேரட் சாகுபடி செய்தால் விவசாயிகள் நல்ல மகசூலை நிச்சயம் எடுக்கலாம். விதை நன்றாக இருந்தால் எதிர்பார்த்ததை விட மகசூல் கூடுதலாக கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆதலால் மலைப் பகுதி விவசாயிகள் இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். முதலில் அடியுரமாக ஒரு ஏக்கருக்கு நான்கு டிராக்டரில் லோடு மக்கிய தொழு உரம் , 2 கிலோ சூடோமோனஸ், இரண்டு கிலோ டிரைக்கோடெர்மா விரிடி, 75 கிலோ சாம்பல் 150 கிலோ வேப்பம் புண்ணாக்கு கொடுப்பது நல்லது.

வளர்ச்சி ஊக்கி அளிப்பு அட்டவணை:
3 மூன்றாம் நாள் – உயிர் தண்ணீருடன் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தரைவழி கொடுக்கலாம். 5 ம் நாள் – E.M 100 ml per 10 litertank காலையில் spray செய்யவும். மாலையில் தரைவழி ஒரு ஏக்கருக்கு போதுமான அளவு தண்ணீரில் 750 மில்லி லிட்டர் எம் கரைசல் கலந்து தரைவழி தரவும். நடவு செய்த 12 ம் நாள் – பஞ்சகாவியா 200 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஏக்கருக்கு 1 _2 லிட்டர் கொடுக்கலாம்.

20ம் நாள் – பஞ்சகாவியா 200 ml per 10 liter tank spray செய்யவும் .மாலையில் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் மீன் அமிலம் தரைவழி தரவும். 25ம் நாள் – கற்பூர கரைசல் spray செய்யவும். 30ம் நாள் – பஞ்சகாவிய 200 ml per 10 liter tankspray செய்யவும் . தரைவழி ஏக்கருக்கு 2 _3 லிட்டர் கொடுக்கலாம். 33 மூன்றாம் நாள் – ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் /வேம் தரைவழி கொடுக்கலாம்.

38 ம் நாள் – கற்பூர கரைசல் spray செய்யவும். ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 100 லிட்டர் தரைவழி தரவும். 40ம் நாள் – E.M 300 ml per 10 liter tankspray செய்யவும். மாலையில் 75 கிலோ சாம்பல் அல்லது ஒரு லிட்டர் பொட்டாஷ் பாக்டீரியா தண்ணீரில் கலந்து தரைவழி தரலாம். 45ம் நாள் – மீன் அமிலம் 75 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர் கொடுக்கலாம்.

50ம் நாள் – தரைவழி ஒரு ஏக்கருக்கு போதுமான அளவு தண்ணீரில் இரண்டு லிட்டர் எம் கரைசல் கலந்து தரைவழி தரவும். 55ம் நாள் – காலை தண்ணீருடன் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தரைவழி கொடுக்கலாம். மாலையில் ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ வேம் பவுடரை தண்ணீரில் கலந்து வேர் வழி தரவும்.

60ம் நாள் – E.M 100 ml per 10 liter tank காலையில் spray செய்யவும். 75 கிலோ சாம்பல் அல்லது ஒரு லிட்டர் பொட்டாஷ் பாக்டீரியா தரைவழி கொடுக்கலாம். பாஸ்போபாக்டீரியா 2 கிலோவை தண்ணீரில் கலந்து தரைவழி கொடுக்கலாம். மாலையில் தரைவழி ஒரு ஏக்கருக்கு போதுமான அளவு தண்ணீரில் அரை லிட்டர் எம் கரைசல் கலந்து தரைவழி தரவும்.

70ம் நாள் – E.M 100 ml per 10 litertank காலையில் spray செய்யவும். மாலையில் தரைவழி ஒரு ஏக்கருக்கு போதுமான அளவு தண்ணீரில் அரை லிட்டர் எம் கரைசல் கலந்து தரைவழி தரவும். 72 ஆம் நாள் – காலையில் பாஸ்போபாக்டீரியா 2 லிட்டர் அல்லது எலும்பு உரம் 50 கிலோ தரைவழி கொடுக்கலாம். மாலையில் ஒரு லிட்டர் சூடோமோனஸ் தரைவழி கொடுக்கலாம்.

75ம் நாள் – ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ வேம் பவுடரை தண்ணீரில் கலந்து வேர் வழி தரவும். 80ம் நாள் – மாலையில் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் மீன் அமிலம் தரைவழி தரவும். அடி உரத்துடன் பவுடராக இருந்தால் சூடோமோனாஸ் 2 கிலோ பவுடரும் திரவமாக இருந்தால் ஒரு லிட்டரும் கலந்து கொடுப்பது நல்லது.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

பகிருங்கள்

என்.மது பாலன்

என்.மதுபாலன், வேளாண்மை உதவி இயக்குனர் (ஓய்வு).
Back to top button
error: Content is protected !!