1.ஜமுனாபாரி
-
- இவ்வின ஆடுகள் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சார்ந்தது
- உடல் வெண்மை நிறத்திலும், கருமை நிறப் புள்ளிகள் கழுத்திலும் காதுகளிலும் காணப்படும்
- இந்த இன ஆடுகள் உயரமாகவும், பெரிய உடலமைப்பையும், இந்திய இன ஆடுகளிலேயே நீண்ட கால்களையும் கொண்டது
- ரோமானிய மூக்கும் அதன் மேலுள்ள முடிக்கற்றையும் இதற்கு கிளியின் வாயைப் போன்ற தோற்றத்தை அளிக்கிறது.
- கொம்புகள் குட்டையாகவும், தட்டையாகவும் பின்னோக்கி முறுக்கியும் காணப்படும்
- தொடைப் பகுதியில் நீண்ட முடிக்கற்றைகள் காணப்படும்
- நீண்ட தொங்கும் காதுகளைக் கொண்டது
- வளர்ந்த கிடா 90-100 செ.மீ உயரமும் 65-80 கி.கி எடையுடனும், பெட்டை 70-80 செ.மீ உயரமும் 45-60 கி.கி எடையுடனும் இருக்கும்
- பொதுவாக பெட்டை ஆடுகள் 20-25 மாத வயதில் முதல் குட்டி ஈனும், பிறந்த குட்டியின் எடை 4 கி.கி இருக்கும்.
- ஒரு நாளைக்கு 2-2.5 கி.கி பால் உற்பத்தி செய்யக்கூடிய திறன்பெற்றது. ஆண்டொன்றிற்கு 274 நாட்களில் 280 கி.கி பால் உற்பத்தி செய்யும். பாலில் கொழுப்புச் சத்து 3 முதல் 3.5 சதவிகிதம் இருக்கும்.
2. பீட்டல்
-
- இவ்வின ஆடுகள் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளன
- பால் மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன
- ஜமுனாபாரி ஆடுகளை விட உயரத்தில் சிறியவை
- சிவப்பு நிறத்துடன் வெண்புள்ளிகள் உடல் முழுவதும் காணப்படும்
- கிடாக்களுக்கு தாடி உண்டு
- முதல் குட்டி ஈனும் வயது 20-22 மாதங்கள் மற்றும் பிறந்த குட்டியின் எடை 3 கி.கி
- வளர்ந்த கிடா 50-70 கி.கி எடையுடனும் இருக்கும்
- நாளொன்றுக்கு 1-2 கி.கி, ஆண்டொன்றுக்கு 177 நாட்களில் 591.5 கி.கி பால் உற்பத்தி செய்யும் திறன் உடையது.
3. பார்பாரி
-
-
- குறைந்த ரோமமும், நீண்ட கொம்புகளும் கொண்ட இவ்வின ஆடுகள் டில்லி, உத்திரப்பிரதேசம் மாநிலங்களிலும் ஹரியானா மாநிலத்தின் குர்கயான், பானிபட், கர்னால், ரோடக் பகுதிகளிலும் காணப்படுகிறது.
- பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்கு பயன்படுகிறது
- உடல் வெண்மை நிறத்திலும், பழுப்பு நிறப் புள்ளிகளுடனும் காணப்படும்
- வளர்ந்த கிடா 35-45 கி.கி எடையுடனும், பெட்டை 25-35 கி.கி எடையுடனும் இருக்கும்
- சிறந்த இனப்பெருக்கத்திறன் உடையது 12-15 மாதங்களில் இருமுறை குட்டி ஈனும். ஒவ்வொரு முறையும் 2-3 குட்டிகள் ஈனும்
- தினமும் 1-1.5 கி.கி பால் கொடுக்கக்கூடிய திறன் பெற்றது.
- கொட்டில் முறையில் வளர்க்கும்பொழுது தினசரி பால் உற்பத்தி 0.90-1.25 கி.கி
- பாலின் கொழுப்புச் சத்து 5ரூ பால் கொடுக்கும் காலம் 108 நாட்கள் என இதன் உற்பத்தித் திறன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
4.தலைச்சேரி
-
-
- மலபாரி ஆடுகள் எனவும் அழைக்கப்படுகிறது
- கேரளா மாநிலத்தில் காணப்படுகிறது
- இறைச்சி உற்பத்திக்காக பயன்படுகிறது
- வெள்ளை, பழுப்பு மற்றும் கருமை நிறங்களில் காணப்படுகிறது
- வளர்ந்த கிடா 40-50 கி.கி எடையுடனும், பெட்டை 30-40 கி.கி எடையுடனும் இருக்கும்
- தினமும் 1-2 கி.கி பால் உற்பத்தி செய்யும் திறன் பெற்றது
- சிறந்த இனப்பெருக்கப் பண்புகளை உடையது
- ஓவ்வொரு முறையும் 2-3 குட்டிகள் ஈனும் திறன் பெற்றவை
-
5.சிரோகி
-
- பழுப்பு நிறத்தில் கருப்பு அல்லது வெளிறிய நிறத்தில் திட்டுகள் காணப்படும்
- நடுத்தர உடலமைப்பைக் கொண்டது
- வால் சுருண்டு காணப்படும்
- கொம்புகள் குட்டையாகவும், முன்னோக்கியும் பின்னோக்கியும் வளைந்தும் காணப்படும்
- பிறந்த குட்டியின் எடை 2 கி.கி வளர்ந்த கிடா 50 கி.கி எடையுடனும், பெட்டை 23 கி.கி எடையுடனும் இருக்கும்
- வருடத்திற்கு ஒருமுறை குட்டி ஈனும், பொதுவாக இரட்டைக் குட்டிகள் ஈனும்
- முதல் குட்டி ஈனும் வயது 19 மாதங்கள்
- 175 நாட்களில் 71 கி.கி பால் உற்பத்தி செய்யும் திறன் பெற்றது
6.உஸ்மனாபாடி
-
- பெரும்பாலும் கருமை நிறத்திலும் அல்லது வெள்ளை, பழுப்பு நிறத்திலும் காணப்படும்
- நீண்ட அல்லது குட்டையான ரோமங்களைக் கொண்டது
- உயரமான மற்றும் பெரிதான உடல் மற்றும் கால்களைக் கொண்டது
- பிறந்த குட்டியின் எடை 2.4 கி.கி
- வருடத்திற்கு ஒரு முறை குட்டி ஈனும்
- முதல் குட்டி ஈனும் வயது 19-20 மாதங்கள்
- இறைச்சி உற்பத்திக்காக பயன்படுகிறது
- தினசரி 3.5 கி.கி பாலும், ஒரு பால் கொடுக்கும் காலத்தில் 170-180 கி.கி பால் உற்பத்தி செய்யும் திறன் பெற்றது.
7.கன்னி ஆடு
-
-
- உயரமான ஆடுகள்
- தமிழ்நாட்டின் திருநெல்வேலி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் காணப்படுகின்றது
- உடல் முழுவதும் கருமை நிறத்திலும் முகத்தின் இரு பக்கங்களிலும் அடிவயிறு, கால்களில் வெண்மை நிறம் காணப்படும்
- இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றது
- ஓவ்வொரு முறையும் 2-3 குட்டிகள் ஈனும்
- வளர்ந்த கிடா 35-40 கி.கி எடையும் பெட்டை 25-30 கி.கி எடையும் இருக்கும்
-
- வறண்ட சூழ்நிலையிலும் நன்கு வளரும் திறன்பெற்றது
-
8.கொடி ஆடு
-
-
- உயரமான இவ்வின ஆடுகள் தமிழ்நாட்டின் சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளன
- பெரும்பாலும் கருமைநிறத்தில் காணப்படுகின்றது
- ஒவ்வொரு முறையும் 1-2 குட்டிகளை ஈனும்
- ஆடுகளின் மேய்ச்சலின்போது வழிகாட்டியாக செயல்பட பயன்படுகிறது
-
9.வங்காள கருப்பு
-
- பொதுவாக கருமைநிறத்தில் காணப்படுகிறது. மென்மையான, பளப்பளப்பான சிறிய ரோமங்களைக் கொண்டது
- சிறிய உடலமைப்பு, குட்டையான கால்கள், கிடா, பெட்டை இரண்டிலும் தாடி உண்டு
- கிடா 15 கி.கி எடையுடனும் பெட்டை 12 கி.கி எடையுடனும் இருக்கும்
- சிறந்த பொருளாதார பண்புகளைக் கொண்டது
- ஓவ்வொரு முறையும் 2,3 அல்லது 4 குட்டிகள் வரை ஈனும்
- வருடத்திற்கு இருமுறை குட்டிகள் ஈனும். சராசரி குட்டி ஈனும் திறன் 2.1
- முதல் குட்டி ஈனும் வயது 9-10 மாதங்கள்
- பால் கொடுக்கும் காலம் 90-120 நாட்கள், பாலின் அளவு 53 கி.கி
- இதன் தோல் மிகுந்த தரம் உடையது. தரம் உயர்ந்த காலணிகள் தயாரிக்கப் பயன்படுகிறது.
10.செகு
-
- பெரும்பாலும் வெண்மை நிறத்தில் காணப்பட்டாலும், பழுப்பு கலந்த இளஞ்சிவப்பு நிறத்திலும் காணப்படும்
- பிறந்த குட்டியின் எடை 2.0 கி.கி, வளர்ந்த கிடா 39 கி.கி எடையுடனும், பெட்டை 26 கி.கி எடையுடனும் இருக்கும்
- வருடத்திற்கு ஒரு முறை ஒரு குட்டி ஈனும்
- பால் கொடுக்கும் காலம் 187 நாட்கள், பாலின் அளவு 69 கிகி
- உப்பு மற்றும் சிறிய அளவு சுமைகளை தூக்கிச் செல்லப் பயன்படுகிறது
- சிறிய காதுகளையும், நடுத்தர கால்களையும் கொண்டது
- நீண்ட ரோமங்களைக் கொண்டது
- கொம்புகள் வளைந்தும் முறுக்கியும் காணப்படும்
- பாஸ்மினா எனும் ரோமத்திற்காக வளர்க்கப்படுகிறது.
11.சங்தங்கி
- பொதுவாக வெள்ளை நிறத்தில் காணப்படும். மேலும் பழுப்பு, சாம்பல், கருமை நிறத்திலும் காணப்படும்
- பாஸ்மினா எனப்படும் ரோம உற்பத்திக்காக வளர்க்கப்படுகின்றது
- வலிமையான, குட்டையான உடல் மற்றும் கால்களைக் கொண்டது
- பெரிய அரைவட்ட வடிவில் வளைந்த கொம்புகளைக் கொண்டது
- வருடத்திற்கு ஒரு முறை ஒரு குட்டி ஈனும்
- முதல் குட்டி ஈனும் வயது 20 மாதங்கள்
- பிறந்த குட்டியின் எடை 2.1 கி.கி.
உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
+1
+1
1
+1
+1
+1
+1