அவசியமானது விதைப் பெருக்கம் குறித்து அறிவது

விதைப் பெருக்கம்

தலைமுறை விதைப் பெருக்க முறை

தலைமுறை விதைக் பெருக்கமுறை என்பது ஒரு குறிப்பிட்ட விதை இரகத்தை சான்றுவிதை நிலை வரையில் விதைப்பெருக்கம் செய்வதே ஆகும். விதைப் பெருக்க முறையைத் தேர்வு செய்வது மிக முக்கியமாகும். விதைப்பெருக்கம் வெற்றிகரமாக அமைய இந்தத் தேர்வு மிக அவசியம். விதைப் பெருக்க முறையின் தேர்வு கீழ்க்கண்ட விபரங்களைச் சாரும்.

  • மரபியல் வேறுபாடுகளின் விகிதம்
  • விதைப்பெருக்க விகிதம்
  • மொத்த விதைத் தேவை
  • மூன்று தலைமுறை மாதிரி
  • வல்லுநர் விதை – ஆதார விதை – சான்று விதை
  • நான்கு தலைமுறை மாதிரி
  • வல்லுநர் விதை – ஆதார விதை (I) – ஆதார விதை (II) – சான்று விதை
  • ஐந்து தலைமுறை மாதிரி

வல்லுநர் விதை – ஆதார விதை (I) – ஆதார விதை (II) – சான்று விதை (I) – சான்று விதை (II)

வேளாண் உற்பத்தியின் முதன்மையான இடுபொருள் விதையே ஆகும். பயிர்களின் புதிய இரகம் வெளியிம் போது அதன் மூலவிதைகள் வல்லுநரிடம் இருக்கும். அதனை வணிகத்திற்காக மேற்கூறிய பயிர்ப்பெருக்க முறைகளில் ஒன்றைக் கையாண்டு, மூல விதைகளிலிருந்து, வல்லுநர் விதை, ஆதார விதை மற்றும் சான்று விதை வகைகள் பெருக்கம் செய்யப்படுகின்றன.

வல்லுநர் விதை

வல்லுநர் விதையானது மூலவிதையிலிருந்து பயிர்ப்பெருக்க வல்லுநரின் கண்காணிப்பில் ஏதாவது ஒரு ஆராய்ச்சி மையத்திலோ அல்லது வேளாண் பல்ககலைக்கழகத்திலோ விதைப்பெருக்கம் செய்யப்படுவதாகும். வல்லுநர் விதைப்பெருக்கத்தை விஞ்ஞானிகளும், சான்றிதழ் மையம் மற்றும் தேசிய விதைக் கழகத்தின் அதிகாரிகளும் ஒரு குழுவாக கண்காணிப்பர். இந்த விதையின் மரபியல் தூய்மை 100 சதவீதம் இருக்கவேண்டும்.

சான்றட்டையின் நிறம் – மஞ்சள்

ஆதார விதை

ஆதார விதையனாது வல்லுநர் விதையின் சந்ததி ஆகும். இதன் உற்பத்தியை தேசிய மாநில பண்ணைக் கழகம், தேசிய விதைக் கழகம் மற்றும் மாநில விதைக் கழகத்தைச் சேர்ந்த பயிர்ப் பெருக்க வல்லுநர்களும், விதை நுட்ப அதிகாரிகளும் கண்காணிப்பார்கள். இதன் மரபியல் தூய்மை 99.5 சதவிகிதம் இருக்கவேண்டும்.

சான்றட்டையின் நிறம் – வெள்ளை

சான்று விதை

ஆதார விதைகளின் சந்ததியே சான்று விதைகள் ஆகும். இதன் உற்பத்தியை சான்றிதழ் மையங்கள் கண்காணிக்கும். இதன் உற்பத்தியை மாநில மற்றும் தேசிய விதைக் கழகம் மற்றும் தனியார் விதை நிறுவனங்கள், முண்ணனி விவசாயிகளின் நிலங்களில் மேற்கொள்வர். வணிகரீதியாக விவசாயிகளுக்கு விற்கப்படுவது இவ்வகை விதைகளே ஆகும். இதன் மரபியல் தூய்மை 99 சதவீதம் இருக்கவேண்டும்.

சான்றட்டையின் நிறம் – நீலம்

சான்று விதைகளுக்கும் உண்மை விலை விதைகளுக்கும் உள்ள வேறுபாடு

சான்று விதை உண்மை நிலை விதை
சான்றிதழ் பெறுவது
தண்னிச்சையான முடிவாகும்.
உண்மை நிலை அடையாளம் என்பது அறிவிக்கப்பட்ட இரகங்களுக்கு அவசியம் ஆகும்.
அறிவிக்கப்பட்ட இரகங்களுக்கு மட்டும் பொருந்தும். அறிவிக்கப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட இரகங்களுக்கு பொருந்தும்.
குறைந்தபட்ச நிலத்தரம் மற்றும் விதைத் தரத்தை நிறைவு செய்யவேண்டும். புறத்தூய்மை மற்றும் முளைப்புத் திறன் பரிசோதனை செய்யவேண்டும்.
விதைச் சான்றிதழ் அலுவலர்களும், விதை ஆய்வாளர்களும், ஆய்விற்கான மாதிரிகளை எடுக்கலாம். விதை ஆய்வாளர்கள் மட்டுமே விதைத் தரத்திற்கான சோதனை மாதிரிகளை எடுக்கவேண்டும்.

விதை பெருக்க விகிதம்

விதைப் பெருக்க விகிதம் என்பது ஒரு தனி விதையை விதைத்து அறுவடை செய்யும் போது அதிலிருந்து கிடைக்கும் விதைகள் ஆகும். இந்த பெருக்க விகிதம் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவு விதையிலிருந்து எவ்வளவு தரமான விதைகள் கிடைக்கின்றன என்பதை அறிய முடிகிறது.

 

 

பயிர் விதைப்பெருக்க விகிதம்
கோதுமை 1:20
நெல் 1:80
1:100
மக்காச்சோளம் 1:80
1:100
சோளம் 1:100
கம்பு 1:200
கேழ்வரகு 1:80
கொண்டைக்கடலை 1:10
உளுந்து 1:40
பச்சைப்பயிறு 1:40
தட்டைப்பயிறு 1:40
கொள்ளு 1:40
மொச்சை 1:40
துவரை 1:100
மலைப்பயிர்கள் 1:433
உருளைக் கிழங்கு 1:4
நிலக்கடலை 1:8
கடுகு 1:100
சோயாபீன்ஸ் 1:16
சூரியகாந்தி 1:50
எள் 1:250
ஆமணக்கு 1:60
பருத்தி 1:50
ஜ¤ட் 1:100
மெஸ்தா 1:40
சணல் 1:30
குதிரை மசால் 1:25
ஓட்ஸ் 1:15
வெண்டை 1:100
தக்காளி 1:400
கத்திரிக்காய் 1:450
மிளகாய் 1:240
தர்பூசணி 1:100
பரங்கிக்காய் 1:160
பாகற்காய் 1:41
சுரைக்காய் 1:99
பீர்க்கன்காய் 1:83
வெள்ளரிக்காய் 1:200
கொத்தவரை 1:50
பட்டாணி 1:19
வெங்காயம் 1:171
முள்ளங்கி 1:100
கேரட் 1:83

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்