அல்லம நாய்க்கன்பட்டி மலை மாடு | கிடைமாடு | கீதாரி வாழ்க்கை பயணம் 06

கிடைமாடு தேடல் பயணம் நிறைய அனுபவங்களை கற்றுக் கொடுக்கின்றது. இதுவும் மலைமாடு மேய்ப்பவர்களின் நேர்காணல் எங்கள் அனுபவத்தை அதிகப்படுத்தியது. எழுமலை அருகில் உள்ள அல்லம நாய்க்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு.சி.அருண்குமார் அவர்கள், என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சார் எங்க ஊர்ல தலைமுறை தலைமுறையா மலையில் மாடு மேய்க்கும் கீதாரிகள் இருக்காங்க. அவுங்களை எடுக்க வருவீங்களா என்று. அன்பான அழைப்பை ஏற்று நாங்கள் அங்கு சென்றோம்.

60 கி.மீ பைக் பயணம், வழக்கம்போல், நானும், கேமராமேனும் உசிலம்பட்டியைக் கடந்து சென்றோம். ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு முன்னதாக எழுமலை சென்று அங்கு விவசாய நேர்காணல் அனுபவம் இருந்த காரணத்தால் அந்த ஊரை மீண்டும் பார்ப்பதில் அவ்வளவு மகிழ்ச்சி எனக்குள். இந்த முறை எழுமலை பச்சைபேசல் என்றே காட்சி அளித்தது. மக்காச்சோளம், கம்பு ஆகியவைதான் அங்கு அதிகமாக பார்த்திருந்தேன். ஏனெனில் வறட்சியான பகுதி. ஆனால் இந்த முறை பப்பாளி, அவரை, கம்பு, பருத்தி, சின்ன வெங்காயம், நிலக்கடலை என பல்வேறு சாகுபடிகளை காண முடிந்தது. கடந்தாண்டு பெய்த மழை பலன் கொடுத்திருப்பது மகிழ்ச்சி.

எழுமலையில் காத்திருந்தோம், கோவை பேக்கரி அருகில் வாருங்கள் என்றார் அருண். நாமும் அங்கு சென்றோம். உடனடியாக மலைக்குச் செல்வோம் வாருங்கள் என்று கூற, கண்டிப்பாக சாப்பிட்டே ஆக வேண்டும் என்று அங்கிருக்கும் இட்லி கடைக்கு அழைத்துச் சென்றார். கிராமத்து கடை என்பதால் அந்த சுவை எங்களுக்கு பிடித்திருந்தது. பிறகு அங்கிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள அல்லம நாய்க்கன்பட்டி கிராமத்திற்குச் சென்றோம். அங்கிருந்து சில கி.மீ தொலைவில் மலை அடிவாரத்தில் முள் பட்டிக்குள் மாடுகள் அடைக்கப்பட்டிருந்தன.

நாட்டு மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த வெண்கல மணி சத்தம் எங்களை புத்தம் புது உலகத்திற்கு அழைத்து வந்ததுபோல் இருந்தது. அந்த மொழியை புரிந்து கொள்வதற்குள் முதலில் திரு.வரதராஜன் அவர்கள் அங்கு வந்துசேர்ந்தார். முதலாவதாக அவரிடம் நேர்காணல் எடுத்துக் கொண்டோம். மலையில் மாடு மேய்ப்பது குறித்தும், அவர்கள் பாரம்பரியமாக கடைபிடித்து வரும் ஐதீகம் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

அவரின் எதார்த்தமான பேச்சும், மலை மாடு மேய்க்கும் அனுபவமும் எங்களுக்கு பல்வேறு புது தகவல்களை தந்தது. அந்த பதிவை வீடியோவில் நீங்களும் கண்டு ரசிக்கலாம். அந்த வீடியோவின் லிங்…

அதற்கு அடுத்ததாக திரு.சுப்பையா அவர்கள் அங்கு வந்தார். 50 மாடுகள் முதல் ஆரம்பித்த தனது முந்தைய தலைமுறையினரைக் கடந்து தற்போது 75 மாடுகளுக்கும் மேல் வைத்திருப்பதாகவும், இப்பகுதியில் தனது உறவினரான மாடு மேயக்கும் திரு.வரதராஜன் அவர்களுடன் இணைந்து தானும் மாடு மேய்ப்பதாக கூறினார். அவரிடமும் ஒரு நேர்காணல் எடுத்தால் என்ன என்று தோன்றிதே இந்த வீடியோ பதிவு.

அத்தனை தித்திப்பான மனிதர், பெரிய அளவில் பேசத் தெரியவில்லை என்றாலும், நமது கேள்விகளுக்கு மிக எதார்த்தமாக பதில் அளித்தார். அவருக்கு நாட்டு மாடுகளையும், இந்த மலையையும் தவிர பெரிதாக ஏதும் தெரியவில்லை என்றபோதும், அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும், மலைமாடுகளின் எதிரொலியாகவே எங்கள் காதுகளுக்கு கேட்டது. இந்த வீடியோவில் நீங்களும் அதைக் கேட்டு ரசிக்கலாம்.

இருவரையும் நேர்காணல் எடுத்துவிட்டு, எப்படி அத்தோடு அந்த பயணத்தை முடித்துக் கொள்வது. ஆதலால் திரு.அருண் அவர்களின் தோட்டத்திற்குச் சென்றோம் சற்று இளைப்பாற. அவரது தோட்டம் முழுக்க ஓங்கி வளர்ந்திருந்த கம்பும், அதைக் கொத்திக் கொண்டிருந்த குருவியும் நம்மை மயக்கியது. பிறகு என்ன கம்பு சாகுபடி குறித்து அவரது தந்தையிடம் ஒரு நேர்காணல் எடுத்தோம். அந்த வீடியோவினை விரைவில் பதிவு செய்கின்றோம். நன்றிகள்.
________________________________________________________
ஹலோ மதுரை சேனல்

உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:

Hello Madurai M.Ramesh – 95 66 53 1237. ( Whats app )
Hello Madurai Raj – 6382333644 ( Camera Man )
_________________________________________________________
மேலும் ​எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.

? App Link: https://play.google.com/store/apps/de…

? Facebook :https://www.facebook.com/maduraivideo

?web site : https://hellomaduraitv.com/

?web site : https://hellomadurai.in/

?web site : https://tamilvivasayam.com/

? Telegrame Link: https://t.me/hellomadurai
_________________________________________________________

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்