இயற்கை உரம்

அரப்பு மோர் கரைசல் தயாரிக்கும் முறைகள்

Organic fertilizer - Agri - Albizia amara

தேவையான பொருட்கள்

  • 5 லிட்டர் மோர்,
  • 1 லிட்டர் இளநீர்,
  • 1-2 கிலோ அரப்பு இலைகள் (அல்லது, 250-500 கிராம் இலை தூள்),
  • 500 கிராம் பழ கழிவுகள் அல்லது பழ கழிவுகளில் இருந்து எடுக்கப்பட்ட 1 லிட்டர் சாறு.

தயாரிப்பு

  • மோர் மற்றும் இளநீரை நன்கு கலக்கவும். இலைகளை நன்கு நொறுக்கவும். பழகழிவுகளைப் பயன்படுத்தி இருந்தால் அதனை நொறுக்கப்பட்ட இலைகளுடன் சேர்த்து நைலான் வலையில் இந்த கலவையை வைத்து கட்டி வைக்கவும்.
  • வாழையை இளநீர் – மோர் கரைசலில் மூழ்குமாறு வைக்கவும். ஏழு நாட்களில் நொதித்து விடும்.
  • நைலான் வலையை பயன்படுத்துவதன் மூலம் தெளிக்கும்போது வடிகட்டும் அவசியத்தை தவிர்க்க முடியும்.
  • நீங்கள் அரப்பு இலை தூள் பயன்படுத்துவதாக இருந்தால், பழ கலவைகளுக்கு பதிலாக பழச்சாறு பயன்படுத்த வேண்டும்.
  • நான்கு பொருட்களையும் கலந்து அதனை ஏழு நாட்களுக்கு நொதிக்க விட வேண்டும்.

குறிப்பு

விவசாயிகளுக்கு செயல்முறையை எளிமைப்படுத்த வேண்டும் என்பதால்தான், இங்கு பழ சாற்றுக்கு மாற்றாக பழக்கழிவும், இலைப்பொடிக்கு மாற்றாக அரப்பு இலைகளும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. அரப்பு கிடைக்கவில்லை என்றால், அதற்கு பதிலாக சோப் நட்டு விதை தூள் பயன்படுத்தலாம். இதனை சோப்பு நட்டு-மோர் கரைசல் என்று அழைக்கலாம். தாவரங்கள் நொதிக்கும் போது ஒட்டும், பசை போன்ற திரவத்தை வெளியிட செய்கிறது. மோருடன் இந்த திரவத்தை சேர்த்தால் புளித்து விட கூடும். செம்பருத்தி இலைகள், காட்டுக்கொடி, பசலை (கீரைகள்), அவரை, மிருதுவான வெற்றிலை, மற்றும் பலாப்பழத்தின் தடித்த தோல் (வெளி தோல்) உதாரணங்களாகும்.

பயன்பாடு

500மில்லி முதல் 1 லிட்டர் கரைசலை பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். இது தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது, பூச்சிகளை தடுக்கிறது, மற்றும் பூஞ்சை நோய்களுக்கு எதிர்ப்பு தன்மை உருவாகிறது. இந்த கரைசலானது கிப்பெரெளிக் அமிலம் போன்ற திறன் வாய்ந்தது.

மோர் கரைசல்– மேம்படுத்தப்பட்ட முறை

இந்த மோர் கரைசல் ஒரு எளிதான மற்றும் மேம்படுத்தப்பட்ட முறையாகும். முந்தைய இளநீர் மோர் கரைசல் மற்றும் அரப்பு மோர் கரைசல் போன்று இதற்கும் அதே பயன்கள் உள்ளன.

தேவையான பொருட்கள்

  • மோர் 4 லிட்டர் ,
  • இளநீர் 1 லிட்டர் ,
  • பப்பாளி பழ கூழ் 250மில்லி
  • மஞ்சள் தூள் 100 கிராம்,
  • பெருங்காயம் தூள் 10 முதல் 50 கிராம்.
  • வேம்பு,
  • துளசி ,
  • அரப்பு ,
  • சீதாப்பழம்,
  • நொச்சி,
  • கற்றாழை மற்றும் புதினா.

இந்த இலைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மேலே உள்ள கரைசலில் கலந்து விடவும். இதனை 7 நாட்களுக்கு நொதிக்க விட வேண்டும்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

பகிருங்கள்

தமிழ் விவசாயம்

உழவின்றி உலகில்லை என்று உவகை கொள்வோம். அத்தொழிலையே நாம் அனைவரும் செய்வோம் "தமிழ் விவசாயம்" Email: tamilvivasayam1947@gmail.com
Back to top button
error: Content is protected !!