
அயிரை மீன் வளர்ப்பது எப்படி ?
தமிழ் விவசாயம் நேயர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்னைக்கு நாம பாக்கப்போற வீடியோ அயிரை மீன் வளர்ப்பு பத்தித்தான். ஏன்னா ? அயிரை மீன் வளர்ப்பில் அதிக லாபம் எடுக்கலாம். சரி, அயிரை மீன் வளர்ப்பு முறையில் என்னென்ன விசயங்கள் இருக்குனு வீடியோவில் பார்போம் வாங்க….
முதல்ல அயிர மீன் வளர்ப்பு நன்னீர் முறையில்தான். அதாவது நல்ல தண்ணீர்லதான் அயிர மீன் வளரும். உப்பு தண்ணி இதுக்கு செட் ஆகாது. தென் மாவட்டங்களில் அயிரை மீன் ரொம்ப பிரபலமான உணவு. ஒரு கிலோ ரூ.2000 வரை விற்கபடுகிறது. நா சின்னபிள்ளைல அயிர மீன அடிகக்டி சாப்பிட்டு இருக்கேன். அதோட ருசியே தனி.
அந்த காலத்துல கிராமத்துல ரொம் எளிமையா கிடச்சது. இன்னைக்கு எக்கச்சக்க காசு கொடுத்தாலும் கிடைக்கமாட்டுக்குது. அயிரை மீன் ரொம்ப சின்னதா வளரும். அதிகபட்சம் 2 முதல் 4 கிராம் எடைதான் இருக்கும். உடும்பு துடுப்புல கறுப்பு நிற புள்ளியும், நீண்ட மூக்கும், சாம்பல் நிறமும், வட்டமான வயிற்று பகுதியம்தான் இதோட அடையாளம்
பெரும்பாலும் இந்த மீன்கள் குளத்துல அடியில இருக்கும் மண்ணுக்குள்ள புதைந்து வாழும். ஆண்டுக்கு ஓரிரு முறை குளம், ஏரிகள் நிரம்பி மறுகால் பாயும்போது மட்டுமே இந்த மீன் கிடைப்பதால், பொதுமக்களிடையே இந்த அயிரை மீனுக்கு தனி வரவேற்புதான். முக்கியமா மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டத்துல ஆண்டு முழுவதும் இந்த மீனுக்கு கடும் கிராக்கி இருக்கு.
சளி, இதய நோய்க்கு இத விட வேற நல்ல மருந்தே இல்லனு சொல்றாங்க. சரி விசயத்துக்கு வர்றேன்.
நன்னீர் மீன் வளர்ப்பில் அயிரை மீன் வளர்ப்பு ஒரு புதிய முறையாகும். இது மற்ற மீன் வளர்ப்பு மாதிரி கிடையாது. இதை வளர்க்க சின்ன குளங்களே போதுமானது. அதுவும் மணல் கலந்த குளம் சிறந்தது. இதோட இனப்பெருக்கத்திற்கு சிமெண்டு தொட்டிகள் போதும்.
அயிர மீன வளர்க்க முடிவு செஞ்சுட்டீங்கனா, அதப்பத்தி முதல்ல சில அடிப்படையான விசயங்கள கண்டிப்பா நீங்க தெரிஞ்சுக்கணும். அயிரை மீன்களில் மொத்தம் 3 வகை இருக்கு. அது என்னானா, லேப்பிடோசெப்ளஸ் கோரமண்டலின்சில், லேப்பிடோசெப்ளஸ் மேக்ரோசீர், லேப்பிடோசெப்ளஸ் ஸ்பெக்ரம் அப்டீங்குற மூனும்தான்.
இந்த மீன் இனங்கள் அமைதியாக, தொடர் நீரோட்டம் உள்ள பகுதியில் வசிக்கும். கற்கள் உள்ள பகுதிகளில் கூட்டமாக பார்க்கலாம். குளத்தின் அடிப்பகுதியில் இருக்கும் அழுகிய, மக்கிய பொருட்களை உணவாக எடுத்துக்கும்.
முக்கியமா அயிரை மீன்கள் லேசான காரத்தன்மை உள்ள நீரில் வளரக்கூடியது. இவை மணற்பாங்கான தரைப் பகுதியை கொண்ட நீர்ப்பரப்பிலும், சிறிய கற்களைகொண்ட நீர்ப்பரப்பிலும் இனப்பெருக்கம் செய்யும். சரி இத எப்படி நாம இனப்பெருக்கும் செய்றதுனா ?
அயிரை மீன இனப்பெருக்கம் செய்ய சிமெண்டு தொட்டி அல்லது கண்ணாடித் தொட்டி போதும். அதற்கு 26 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை தேவைப்படும். இந்த மீனில் ஆண், பெண் என கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம்.
அதனால இனப்பெருக்கத்திற்கு 4.5 சென்டிமீட்டருக்கு மேல் வளர்ந்த மீன்களை தேர்வு செய்வதே நல்லது. அப்படி தேர்வு செய்த ஆண், பெண் மீன்களைசிமெண்டு தொட்டியில் போட்டா இனப்பெருக்கம் ஆகும். பொதுவாக ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை இதன் இனப்பெருக்க காலமாகும்.
தொட்டியின் அடிப்பகுதியில் ஆற்று மணல் அல்லது களிமண்ணை மூன்று அங்குல உயரத்திற்கு பரப்பிவிட்டு, தொட்டியில் போதிய அளவு நீரை நிரப்ப வேண்டும். நீர் கலங்கித்தான் இருக்கும். இத அப்படியே மூன்று நாட்கள் வரை வச்சிருக்கணும். அதற்கு அப்புறமா, தொட்டி நீரில்ல அதற்கு தேவையான காற்றை செலுத்த வேண்டும்.
அதன் பிறகு ? முதிர்ச்சி அடைந்த ஆண், பெண் மீன்களை தேர்வு செய்து ஒரு ஆண் மீனுக்கு ஒரு பெண்மீன் என்ற கணக்கில் உங்களுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு ஜோடிய போட்டுக்கோங்க.
அதுக்கு முன்னாடி அந்த தொட்டியில அவைகளுக்கு தேவையான உயிர் உணவு மற்றும் குறுணை உணவுகளை உள்ளே சேர்ப்பது ரொம்ப அவசியம். இதெல்லாம் சரியா செஞ்சீங்கனா ? 15 முதல் 20 நாளில் மீன் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.
பொரித்த இளம்குஞ்சுகள் தொட்டியின் அடிப்பகுதியில் உள்ள அழுக்கு மற்றும் மக்கிப்போன பொருட்களை உணவாக எடுத்துக்கும். இளங்குஞ்சுகளை பிடிப்பது கஷ்டம் அதனால தொட்டியில் உள்ள நீரை முழுவதும் வெளியேற்றியவதை தவிர வேற வழியே இல்ல.
இப்படி எடுத்த குஞ்சுகளை மீன் வளர்ப்பிற்கு பயன்படுத்தப்படும் குளங்களிலேயே இத எளிதாக வளர்க்கலாம். முக்கியமா அயிர மீன் வளர்க்கும் போது, அதற்கு எதிரியான மீன்கள் மற்றும் தவளைகள் குளத்துல நுழைவதை முழுவதுமா தடுத்தே ஆகணும். இல்லனா மீனு நமக்கு இல்ல.
குறிப்பா அயிரை மீன்களுடன் இந்தியப் பெருங்கெண்டை இனங்களான கட்லா, ரோகு, மிர்கால் ஆகியவற்றை சேர்த்து வளர்த்தால், மீன்கள் நல்ல வளர்ச்சியையும், அதிக பிழைப்புத்திறனையும் அடையும்.
அத்தோட அயிரை மீன்களுடன் சாதா கெண்டை, விரால், கெளுத்தி, ஜிலேபி, உளுவை போன்ற மீன் இனங்கள் கலந்து வளர்ப்பதை முற்றிலும் தவிர்த்திருங்க. இதெல்லாம் இதற்கு எதிரி.
இன்னும் இதுகுறித்து புள்ளி விவரமா உங்களுக்கு தெரியணும்னா… கன்னியாகுமரி மாவட்டத்தில, பறக்கை அப்டீங்குற இடத்தில் தமிழ் நாடு மீன் வள பல்கழைக்கழகம் இருக்கும். அங்க போனீங்கனா அயிர மீன் வளர்ப்பு குறித்து ஏ டு இசட் சொல்லித் தருவதோடு மட்டுமில்லாம பயிற்சியோட சான்றிதழ் கொடுத்து, வளர்ப்புக்கான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்குறாங்க.
அதனால அயிர மீன வளர்த்து காச அள்ளணும் னு நினைக்குறவுங்க… முதல்ல பயிற்சி எடுங்க… அப்புறமா… பணம் சம்பாரிங்க… நன்றி வணக்கம்.
_________________________________________________
🤝 ஹலோ மதுரை 🤝 சேனல் 🤝
உங்கள் தொழில் சார்ந்த வீடியோக்கள் எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி எண்:
Hello Madurai M.Ramesh – 📞 95 66 53 1237. ( Reporter – Whats app )
_______________________________________________________
மேலும் எங்களது Hello Madurai App எனும் பிரத்யேக செயலியை கூகுல் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்து எங்கள் வீடியோக்கள் உள்பட ஒட்டுமொத்த மதுரையையும் உள்ளங் கையில் வைத்துக் கொள்ளலாம்.
🔵 App Link: https://play.google.com/store/apps/de…
🔵Online Web Tv : https://hellomaduraitv.com/
🔵 Facebook :https://www.facebook.com/hellomaduraitv
🔵 Hello Madurai News website : https://hellomadurai.in/
🔵 Agri News website : https://tamilvivasayam.com/
🔵 Amma Samaiyal Food website : https://ammasamaiyal.com/
🔵 Telegrame Link: https://t.me/hellomadurai
_______________________________________________________
#fish #fishing #fishinglife #aquarium #nature #food #fishtank #catchandrelease #seafood #foodporn #bassfishing #foodie #sea #pesca #fisherman #angler #ocean #outdoors #bass #instafood #photography #fishingislife #aquascape #bigfish #foodphotography #instagood #carp #aquariumhobby #carpfishing #flyfishing
#fishfarm #fish #fishtank #aquaculture #fishfarming #aquarium #fishing #freshwaterfish #aquascape #guppy #guppyfish #guppytank #guppies #guppyindonesia #fishhobby #livebearer #fishguppy #guppyfarm #livebearers #discusfish #endler #cichlids #guppykontes #guppylover #discusbreeding #pociliawengi #discusfishtank #guppyhobby #discus #guppycirebon