அமிர்த கரைசல் எளிய முறையில் தயாரிக்கும் முறை

மாடு ஒருமுறை போட்ட சாணம், (எந்த மாடாக இருந்தாலும் பயன்படுத்தலாம்) ஒருமுறை பெய்த மூத்திரம், இவற்றை ஒரு பிளாஸ்டிக் வாளியில் எடுத்துக் கொண்டு அதில் ஒருகைப்பிடி வெல்லம், ஒருகுடம் தண்ணீர் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். 24 மணி நேரம் நிழற்பாங்கான இடத்தில் வைக்க வேண்டும். அமிர்த கரைசல் தயார்.

பயன் படுத்தும் முறை

ஒரு பங்கு கரைசலுடன் 10 பங்கு தண்ணீர் சேர்த்து பயிர்களுக்கு தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்கு பத்து தெளிப்பான் (டேங்க்) அளவுக்கு தெளிக்கலாம். வாய்க்கால் நீரிலும் கலந்துவிடலாம். அமிர்தகரைசலை நிலத்தில் தெளித்த 24 மணி நேரத்தில் நுண்ணுயிர்கள் பெருகும். பயிர்கள் நோய்நொடி இல்லாமல் வளர உதவும். பொதுவாக 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த கரைசலைத் தெளிக்கலாம். பயிர்கள் மிகவும் வளமாகக் காணப்பட்டால் வாரம் ஒருமுறை கூடத் தெளிக்கலாம். வசதி இருந்தால் தண்ணீர் பாய்ச்சும் போதெல்லாம் அதனுடன் கலந்துவிடலாம்.

உங்களுக்கு பிடித்துள்ளதா 😍
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
பகிருங்கள்